சுடச்சுட

    

    குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற்ற உள்ள சாலைப்பாதுகாப்பு மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி  வேன் பிரச்சாரம

    By திருச்செங்கோடு,  |   Published on : 12th November 2014 12:52 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மக்களவையில் வருகிற குளிர்கால கூட்டத்தொடரி்ல நிறைவேற்ற உள்ள சாலைப்பாதுகாப்பு மசோதாவை திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தி நடக்கும் வேன் பிரச்சாரம் செவ்வாய்க்கிழமை எல்ச்சிபாளையம் வந்தது.

    இந்த வேன் பிரச்சாரத்தில் அகில இந்திய சாலைப்போக்குவரத்து ஊழியர் கூட்டமைப்பு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சம்மேளனம், தமிழ்நாடு ஆட்டோ  தொழிலாளர் சம்மேளனம் ஆகியவை கலந்து கொண்டு தமிஅழநாடு மற்ரும் கேரளாவி்ல் பிரச்சாரம  செய்து வருகிறது. எல்ச்சிபாளையத்தில இந்த பிரச்சாரக்குழுவிற்கு ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் வரவேற்பு அளித்தது. தலைவர் சுப்ரமணி தலைமை தாங்கினார்.. முருகேசன் முன்னிலை வகித்தார்.

    இந்த மசோதாவின் பாதிப்பான அம்சங்கள் குறித்து அகில இந்திய பொது செயலர் ராஜன்,  கேரள மாநில ஆட்டோ சங்க தலைவர் குமரன், தமிழ்நாடு பொதுச்செயலர் மூர்த்தி, மாநில துணை தலைவர் தியாகராஜன், சிஐடியு மாவட்ட செயலர் வேலுசாமி ஆகியோர்  பேசினர். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் சரக்கு  வாகன  ஓட்டுனர்கள், சிறு வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள. அரசு போக்குவரத்துக் கழக பாதுகாப்பு  போய்விடும். இலவச பஸ் பாஸ் பெற்றுள்ள  32 லட்சம் மாணவ மாணவிகள் பாடு திண்டாட்டமாகிவிடும்.

     லாபமில்லாத வழித்தடத்தில் சேவைக்காக விடப்படும் பேருந்து ரத்தாகி விடும். போக்குவரத்து கார்பரேட் நிறுவனங்கள் கைக்கு போய்விடும். அவர்கள் நிர்ணயித்ததுதான் கட்டணம் என்ற நிலை உருவாகும் சூழல் ஏற்படுவதால் பயணிகள் அதிக கட்டணம் செலுத்த வேண்டி இரு்ககும்.

     சரக்கு வாகன ஓட்டுனர்கள் வாழ்வு சீரழியும். விபத்து ஏற்படின் ஓட்டுனர் உரிமம்  ரத்து, ரூ 2500 முதல்  ரூ 3 லட்சம் வரை அபராதம , 7 ஆண்டு சிறை போன்றவற்றால் ஓட்டுனர்க்ள அதிகம் பாதிக்கப்படுவார்கள்.  ஆகவே அந்த கறுப்பு மசோதாவை திரும்பப்பெற வேண்டும் என்று வேன் பிரச்சரக்குழுவினர் வலியுருத்தினர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai