சுடச்சுட

    

    திருச்செங்கோடு அருகே ரியல் எஸ்டேட் அதிபர் கொலை

    By திருச்செங்கோடு  |   Published on : 12th November 2014 12:51 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்செங்கோடு அருகே ரியல்  எஸ்டேட் அதிபர் திங்கள்கிழமை இரவு  குத்தி கொலை செய்யப்பட்டார்..

    திருச்செங்கோடு கோழிக்கால் நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர்  பழனியப்பன் (62).  விவசாயியான இவர் திருச்செங்கோடு சங்ககிரி சாலையில் சர்வீஸ் ஸ்டேசன் வைத்து நடத்தி வந்தார். ரியல் எஸ்டேட் மற்றும் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி சின்னதங்கம் (55). இவர்களுக்கு கண்ணன் (34) என்ற மகனும் கோமதி (30) என்ற மகளும் உண்டு .  இருவருக்கும் திருமணமாகிவிட்டது.

       ரியல் எஸ்டேட்  விவகாரம் சம்பந்தமாக   சிலருடன்  விரோதம ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திங்கள்கிழமை இரவு இவர் வீடு திரும்ப தனது மாருதி காரை தனியாக  திருச்செங்கோட்டிலிருந்து கொழிக்கால் நத்தம் நோக்கி ஓட்டிச்சென்றார். சிந்தம்பாளையம் கிராமம் அருகே ஆள் நடமாட்டமில்லா இடத்தில் காரை தடு்த்து நிறுத்திய மர்ம நபர்கள் பழனியப்பனை கத்தியால் கு்த்தி கொலை செய்துவிட்டு தப்பினர்..

     தகவல் கிடைத்த திருச்செங்கோடு புறநகர் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.  பழனியப்பனின் சடலத்தை திருச்செங்கோடு அருகே மருததுவமனைக்கு கொண்டு சென்றனர். மகன் கண்ணன்  அளித்த புகாரைப் பெற்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பழனியப்பன் காரில் வைத்திருந்த ரொக்கம், அணிந்திருந்த தங்க நகைகள்  எதுவும் திருட்டுப்போகவில்லை. மேலும் தெரிந்த நபர்கள் கைகாட்டியதால்தான்  காரை  பழனியப்பன் நிறுத்தி இருக்க வேண்டும் என்று தெரிகிறது. இதனால் முன் விரோதம் அல்லது சொத்துப்பிரச்சினை காரணமாக இந்தக்கொலை நடந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்ச சம்பவம் இங்கு பரபரப்பை ஏற்படு்ததி உள்ளது.

     

     

     

     

     

                                                                                  

           

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai