சுடச்சுட

  

  நவ.13-ல் குருசாமிபாளையம் ஸ்ரீமாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா

  By ராசிபுரம்,  |   Published on : 12th November 2014 12:54 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராசிபுரம் அடுத்துள்ள குருசாமிபாளையம் மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா நவ.13-ல் நடைபெறுகிறது. குருசாமிபாளையத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டு விழா சில தினங்களுக்கு முன்பு துவங்கிய நடைபெற்று வரும் நிலையில், முக்கிய விழாவான பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெறுகிறது.  

  செவ்வாய்கிழமை பூவோடு, முளைப்பாரி அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றன. இன்று நவம்பர் 12ம் தேதி புதன்கிழமை கட்டளைதாரர் சார்பில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை இரவு அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நவம்பர் 13ம் தேதி வியாழக்கிழமை  சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பெண்கள் பொங்கல் வைத்து, மாவிளக்கு பூஜை செய்து அம்மனை வழிபாடு நடத்துகின்றனர்.

  அதனை தொடர்ந்து பூந்தேர் ஊர்வலம், வண்டிவேடிக்கை அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நவம்பர் 14ம் தேதி வெள்ளிக்கிழமை அம்மன் புஷ்ப பல்லக்கில் மின் விளக்கு அலங்காரத்துடன் சத்தாபரணம், குறவன், குறத்தி, நையாண்டி மேளம், வாணவேடிக்கை, கரகாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சி நடக்கிறது. நவம்பர் 15ம் தேதி சனிக்கிழமை மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai