சுடச்சுட

    

    நாமகிரிப்பேட்டையில் ரூ.70 லட்சம் மஞ்சள் வர்த்தகம்

    By ராசிபுரம்,  |   Published on : 12th November 2014 12:54 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க நாமகிரிப்பேட்டை ஏல மையத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த மஞ்சள் ஏலத்தில் ரூ.70 லட்சம் மதி்ப்பில் மஞ்சள் ஏலம் நடந்தது.

    நாமகிரிப்பேட்டையில் உள்ள வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க வளாகத்தில் வாரந்தோறும் செவ்வாய்கிழமையில் ஏலம்  நடக்கும்.  இந்த வாரம் நடந்த ஏலத்தில் பல்வேறு பகுதி விவசாயிகள் தங்களது மஞ்சளை கொண்டு வந்திருந்தனர்.

    கூட்டுறவு சங்க வளாகத்தில் நடந்த ஏலத்தில் தலா ரூ.65 கிலோ கொண்ட ஆயிரத்து 346 மூட்டைகள்  விற்பனைக்கு வந்தன.  இதில் விரலி ரகம் குவிண்டால் ஒன்றுக்கு அதிக பட்சமாக ரூ.ஆயிரத்து 529 க்கும்,  குறைந்த பட்ச விலையாக ரூ.6 ஆயிரத்து 609 க்கும் ஏலம் போனது. இதேபோல்  உருண்டை ரகம்  அதிகபட்சமாக குவிண்டால் ரூ.6 ஆயிரத்து 899  க்கும் குறைந்த பட்சமாக ரூ.5 ஆயிரத்து 369 க்கும் விலை போனது. பனங்காலி அதிகபட்சமாக ரூ.14 ஆயிரத்து 222 க்கும், குறைந்த பட்சமாக ரூ.10 ஆயிரத்து 899  க்கும் ஏலம் போனது.  இதில் ரூ.70 லட்சத்திற்கு மஞ்சள் வர்த்தகம் நடந்தது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai