சுடச்சுட

    

    மனநல திட்டம்: எருமப்பட்டியில் 279 மனநலம் பாதித்தோர் மீட்பு,நாமக்கல் ஆட்சியர் தகவல்

    By நாமக்கல்  |   Published on : 12th November 2014 12:47 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்கள் நண்பன் எனும் புதுவாழ்வு மனநல திட்டம் செயல்படுத்தப்படும் எருமப்பட்டி வட்டாரத்தில் இருந்து  இதுவரை மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் 279 பேர் மீட்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தெரிவித்தார்.

    மனநலன் பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுக்கும் வகையில் உங்கள் நண்பன் எனும் புதுவாழ்வு மனநல திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் மாவட்டத்துக்கு ஒரு வட்டாரம் தேர்வு செய்யப்பட்டு அந்த வட்டாரத்திலுள்ள மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டு அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் எருமப்பட்டி வட்டாரம் தேர்வு செய்யப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இதன்தொடர்ச்சியாக அந்த வட்டாரத்திலுள்ள அனைத்து பகுதிகளிலும் மனநல திட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திட பிரச்சார ரதத்தை ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், விளம்பர பிரச்சார வாகனம் எருமப்பட்டி வட்டாரத்திலுள்ள அனைத்து குக்கிராமங்களுக்கும் சென்று மனநலம் குறித்த தகவல்களை பிரச்சாரம் செய்து திட்ட செயல்பாட்டுக்கு வழிவகுக்கும். எருமப்பட்டி வட்டாரத்தில் புதுவாழ்வு மனநல திட்டம் மூலம் இதுவரை 279 மனநலம் பாதிக்கப்பட்டோர் கண்டறியப்பட்டு அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள், ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.

    புதுவாழ்வு மாவட்ட திட்ட மேலாளர் த.தேவகுமார், மாவட்ட சுகாதார துணை இயக்குநர் ஜெமினி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஆர்.பாலாஜி, அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai