சுடச்சுட

    

    மேம்படுத்தப்பட்ட ஆராய்ச்சி மற்றும் வெளியீட்டுத் திறன்கள் குறித்த பயிலரங்கம்

    By ராசிபுரம்,  |   Published on : 12th November 2014 12:57 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆசிரியர்களுக்கான மேம்படுத்தப்பட்ட ஆராய்ச்சி மற்றும் வெளியீட்டுத் திறன்கள் குறித்த ஓருநாள் பயிலரங்கம் மல்லசமுத்திரம் மஹேந்திரா பொறியியல் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்றது. மஹேந்திரா பொறியியல் கல்லூரி மற்றும் சென்னை ஐ.சி.டி அகாடமி, ஆகியவை இணைந்து இதனை நடத்தியது.

    முன்னதாக பயிலரங்கை கல்லூரி தலைவர் எம்.ஜி,பாரத்குமார் துவக்கி வைத்தார். கல்லூரி செயல் இயக்குனர் இரா. சாம்சன் ரவீந்திரன், கல்லூரி முதல்வர் எம்.மாதேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு பயிற்றுநர்களாக  சென்னை எச்.சி.எல். டெக்னாலஜி நிறுவனத்தினை சேர்ந்த பயிற்சியாளர் முனைவர் சாய் நாராயணன்,  பெரியார் பல்கலைக்கழக கணினி அறிவியல் துறை  தலைவர் முனைவர் தங்கவேல் ஆகியோர் இப்பயிலரங்கை நடத்தினர்.

    இதில் ஆசிரியர்கள் மேம்படுத்தப்பட்ட ஆராய்ச்சியின் போது தங்களுடைய துறைகளில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்த முடியும் என்றும் அதற்குண்டான கட்டுரை வெளியீட்டுத் திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் ஆராய்ச்சியில் ஈடுபடும் ஆசிரியர்கள் எவ்விதம் தர பகுப்பாய்வு, பிரசுரங்களை கையாளுதல், பட்டியல் கணக்கீட்டு அளவீடுகள், நெறியாளுமை திறன்கள் போன்றவற்றில் சிறந்து விளங்க வேண்டும் என்றும் பயிற்சியாளர்கள் வலியுறுத்தினர்.

    பயிலரங்கில் துறைத்தலைவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் உட்பட 50-க்கும் மேற்ப்பட்டோர் கலந்துகொண்டனர். பயிலரங்க முடிவில் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கல்லூரி புல முதல்வர் முனைவர் சண்முகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai