சுடச்சுட

    

    திருச்செங்கோடு அருகே ரியல் எஸ்டேட் உரிமையாளர் திங்கள்கிழமை இரவு குத்திக் கொலை செய்யப்பட்டார்.

    நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கோழிக்கால் நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனியப்பன் (62). விவசாயியான இவர், திருச்செங்கோட்டில் சங்ககிரி சாலையில் சர்வீஸ்

    ஸ்டேஷன் நடத்தி வந்தார்.

    ரியல் எஸ்டேட், வட்டிக்குப் பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார்.  ரியல் எஸ்டேட் தொழிலில் சிலருடன் பழனியப்பனுக்கு முன்விரோதம் இருந்து வந்ததாகக்

    கூறப்படுகிறது.

    இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு அவர் மாருதி காரில் திருச்செங்கோட்டிலிருந்து கோழிக்கால் நத்தம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.

    காரை அவரே ஓட்டிச் சென்றார். அப்போது, சிந்தம்பாளையம் கிராமம் அருகே ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் காரைத் தடுத்து நிறுத்திய மர்ம நபர்கள், பழனியப்பனை

    கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டுத் தப்பினர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai