Enable Javscript for better performance
காவிரியில்இழுத்துச் செல்லப்பட்ட மாணவர் சடலமாக மீட்பு- Dinamani

சுடச்சுட

    

    காவிரியில்இழுத்துச் செல்லப்பட்ட மாணவர் சடலமாக மீட்பு

    By பரமத்திவேலூர்  |   Published on : 13th November 2014 04:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரமத்திவேலூர் அருகே காவிரி ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவர், புதன்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டார்.

    கோவை மாவட்டம், புளியங்குளத்தைச் சேர்ந்த முருகவேல் மகன் விக்னேஷ்வரன் (21). இவர் பரமத்திவேலூரிலுள்ள தனியார் கல்லூரியில் பி.காம் சி.ஏ இரண்டாம் ஆண்டு படித்தார். இவர் தனது நண்பர்களுடன் பரமத்திவேலூர் அருகேயுள்ள களிமேடு காவிரி ஆற்றில் செவ்வாய்க்கிழமை மாலை குளித்தார். அப்போது, ஆழம் அதிகமான பகுதிக்குச் சென்று விக்னேஷ்வரன் குளித்த போது, ஆற்று நீரில் இழுத்துச் செல்லப்பட்டார்.

    இதுகுறித்து அவருடன் சென்ற நண்பர்கள் பரமத்திவேலூர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து, தீயணைப்புப் படை வீரர்களின் உதவியுடன் விக்னேஷ்வரனை தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டனர். இந்த நிலையில், காவிரி ஆற்றின் மறுகரையான கரூர் மாவட்டம், வாங்கல் அருகே மல்லாம்பாளையம் ஆற்றில் புதன்கிழமை காலை விக்னேஷ்வரன் சடலமாகக் கிடந்தார். அவரது உடலைக் கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

    இதுகுறித்து பரமத்திவேலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai