சுடச்சுட

  

  குமாரபாளையத்தில் இரட்டையர் இறகுப் பந்துப் போட்டி

  By குமாரபாளையம்,  |   Published on : 13th November 2014 04:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  குமாரபாளையம் ரோட்டரி சங்கம் சார்பில், இரட்டையர் இறகுப் பந்துப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

  ஆண்கள், பெண்கள், 15 வயதுக்கு உள்பட்டோர் பிரிவுகளில் இந்தப் போட்டிகள் ரோட்டரி மஹாலில் நடைபெற்றன. அந்தச் சங்கத் தலைவர் என்.கந்தசாமி தலைமை வகித்தார். செயலர் வி.குமரேசன், பொருளாளர் சி.தேவராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  குமாரபாளையம் நகர்மன்றத் துணைத் தலைவர் கே.எஸ்.எம்.பாலசுப்பிரமணி போட்டிகளைத் தொடக்கிவைத்தார். மூன்று பிரிவுகளிலும் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு ரொக்கம், கோப்பைகளை நகர்மன்றத் தலைவர் சிவசக்தி கே.தனசேகரன் வழங்கினார்.

  எக்ஸல் கல்வி நிறுவனத் தலைவர் ஏ.கே.நடேசன், முன்னாள் தலைவர்கள் சிவசுந்தரம், அசோகன், விளையாட்டு இயக்குநர்கள் ஆர்.லோகநாதன், என்.வித்யபிரகாஷ், ஒருங்கிணைப்பாளர் என்.முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai