கோயில் மணியை திருடியவர் கைது
By திருச்செங்கோடு | Published on : 13th November 2014 04:18 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
திருச்செங்கோடு அருகே கோயில் மணியைத் திருடியவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
திருச்செங்கோடு வட்டம், எலச்சிபாளையம் ஒன்றியம், அத்திமரப்பட்டியில் சின்னாத்தா கோயில் உள்ளது. இந்தக் கோயில் முன்பு பெரிய பித்தளை மணி கட்டப்பட்டிருந்தது. கோயிலின் தர்மகர்த்தா முத்துசாமி, கோயில் மணி செவ்வாய்கிழமை திருடப்பட்டதை அறிந்தார்.
அப்போது, கடை வீதியில் பித்தளை மணியை விற்க முயன்ற ஒருவரை பொதுமக்கள் பிடித்தனர். அவரை பொதுமக்கள் எலச்சிபாளையம் போலீஸில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீஸார் விசாரணை செய்ததில், அவர் செந்தில் (42) என்பதும், நாமக்கல் அருகேயுள்ள மாவுரெட்டிபட்டியைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, போலீஸார் அவரை கைது செய்தனர்.