சுடச்சுட

  

  மதிப்பெண் அச்சத்தால், நாமக்கல் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களின்

  தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. இதுதொடர்பாக கல்வித் துறை ஏற்கனவே விழிப்புணர்வு அளித்தும் வரும் நிலையில், இந்த நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

  நாமக்கல் மாவட்டத்திலுள்ள தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் கடந்தாண்டு செப்டம்பர் முதல் இதுவரை 5 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, புதுச்சத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த பிளஸ் 2 மாணவி விஜயலட்சுமி (17), செவ்வாய்க்கிழமை மாலை கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இவர்கள் அனைவரும் தற்கொலை செய்து கொண்டதற்கு மதிப்பெண் மீதான அச்சமே முக்கியக் காரணமாகும். இதன்படி, செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்ட மாணவியும், தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததை அடுத்து, அவரது பெற்றோர் திட்டியதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டாராம்.

  இதுபோல, பள்ளி மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் நாமக்கல் மாவட்டத்தில் அதிகரித்து வருவது அனைத்துத் தரப்பினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து, மதிப்பெண்களை குறிவைத்து மாணவர்களை இயங்கச் செய்வதும், விளையாட்டு, இசை போன்ற துறைகளில் கவனம் செலுத்த விடாமல் இருப்பதும் மாணவர்களிடையே மனஅழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

  இதுபோன்ற நெருக்கடியால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

  இதனால், மாணவர்களிடையே மன அழுத்தத்தை ஏற்படுத்தும் பள்ளி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவும், மாணவர்களிடையே தற்கொலைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

  இதையடுத்து, நடமாடும் மனநல ஆலோசனை மையம் மூலம் நாமக்கல் மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், தொடர்ந்து தற்கொலை சம்பவங்கள் நடைபெறுவதால் இந்த விழிப்புணர்வு பிரசாரம் போதுமானதாக இல்லை என்பதால், பள்ளி மாணவர்கள் மத்தியில் தற்கொலைக்கு எதிராக விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த மாவட்ட நிர்வாகமும், கல்வித் துறையும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகியுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai