சுடச்சுட

    

    அங்கன்வாடி காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

    By நாமக்கல்  |   Published on : 14th November 2014 04:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர், அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியுடையவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    நாமக்கல் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணிகளின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அங்கன்வாடி மையங்களில் 173 முதன்மை மைய அங்கன்வாடி பணியாளர்கள், ஒரு குறு மைய அங்கன்வாடிப் பணியாளர்கள், 217 முதன்மை மைய அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவை இனச் சுழற்சி முறையில் நிரப்பப்படவுள்ளதால், தகுதியான, திருமணமான, பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    தவிர, தற்போது குறு அங்கன்வாடி மையப் பணியாளர்களாகப் பணிபுரியும் பணியாளர்களில் மூன்று ஆண்டு பணி முடித்த தகுதி வாய்ந்த பணியாளர்கள் முதன்மை அங்கன்வாடி மையக் காலிப்பணியிடத்துக்கும் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது.

    முதன்மை மைய அங்கன்வாடி பணியாளர்களாக நியமிக்கப்படுபவர்களுக்கு ஊதியம் 2500 -5,000 தர ஊதியம் ரூ.500, இதரப் படிகள் என்றும், குறு மைய அங்கன்வாடிப் பணியாளர்களாக நியமிக்கப்படுபவர்களுக்கு 1800 - 3300 தர ஊதியம் ரூ.400, இதரப் படிகள், முதன்மை மைய அங்கன்வாடி உதவியாளர்களாக நியமிக்கப்படுபவர்களுக்கு 1300 -3000 தர ஊதியம் ரூ.300, இதரப் படிகள் என்றும் ஊழியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    முதன்மை மைய அங்கன்வாடி பணியாளர், குறு மைய அங்கன்வாடி பணியாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்க 10ஆம் வகுப்பு தேர்ச்சியும், மலைப் பகுதியிலுள்ள பணியிடங்களுக்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். அங்கன்வாடி உதவியாளர் பணிக்கு தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

    முதன்மை மைய அங்கன்வாடி பணியாளர், குறு மைய அங்கன்வாடி பணியாளர் ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிக்க 2014, நவம்பர் 14-ஆம் தேதியில் குறைந்தபட்சம் 25 வயது நிரம்பியிருப்பதுடன், அதிகபட்சம் பொதுப் பிரிவினருக்கு 35 வயதுக்குள், மாற்றுத் திறனாளிகளுக்கு 38 வயதுக்குள், விதவை, கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு 40 வயதுக்குள் இருக்க வேண்டும். மலைப் பகுதி பெண்களுக்கு குறைந்தபட்சம் 20 வயதும், அதிகபட்சம் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

    முதன்மை மைய அங்கன்வாடி உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க 2014, நவம்பர் 14-ஆம் தேதியில் குறைந்தபட்சம் 20 வயதும், அதிகபட்சம் பொதுப் பிரிவினருக்கு 40 வயதுக்குள், மாற்றுத் திறனாளிகளுக்கு 43 வயதுக்குள், விதவை, கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு 40 வயதுக்குள், மலைப் பகுதி பெண்களுக்கு 45 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பத்தை ஆட்சியரின்

    ஜ்ஜ்ஜ்.ய்ஹம்ஹந்ந்ஹப்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    நிறைவு செய்த விண்ணப்பங்களை 28ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அந்தந்த வட்டாரத்தில் உள்ள குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகத்தில் அளிக்க வேண்டும். தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு குறித்த விவரம் முறையாக தெரிவிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai