Enable Javscript for better performance
\\\"அம்மா\\\' மருந்தகம் அமைக்க கட்டுமானப் பணிகள் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    "அம்மா' மருந்தகம் அமைக்க கட்டுமானப் பணிகள் தொடக்கம்

    By நாமக்கல்  |   Published on : 14th November 2014 04:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல்லில் "அம்மா' கூட்டுறவு மருந்துக் கடை அமைக்கக் கட்டுமானப் பணி நாமக்கல்லில் வியாழக்கிழமை தொடங்கப் பட்டது.

    நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கம் சார்பில், நாமக்கல் பேருந்து நிலைய வளாகத்தில் அமைக்கப்படும் இந்த மருந்தகத்துக்கான கட்டுமானப் பணிகளை நாமக்கல் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர், மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி ஆகியோர் பூமி பூஜை செய்து தொடங்கிவைத்தனர். தொடர்ந்து பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்திடவும் அறிவுறுத்தப்பட்டது.

    நகர்மன்றத் தலைவர் ஆர்.கரிகாலன், நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத் தலைவர் எஸ்.தென்னரசு, கோட்டாட்சியர் க.காளிமுத்து, நகராட்சி ஆணையர் அசோக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai