சுடச்சுட

    

    வடகிழக்குப் பருவமழை பரவலாக பெய்துள்ளதால் அதிக ஈரமும், குளிரும் கொண்ட வானிலை நிலவும் என்று நாமக்கல் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து அந்த மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

    நாமக்கல் மாவட்ட வானிலையில் அடுத்த 4 நாள்களுக்கு (நவ.15 முதல் 18-ம் தேதி வரை) வானம் லேசான, பொதுவாக மேகமூட்டத்துடன் சில இடங்களில் 2 மி.மீ. முதல் 5 மி.மீ. வரை மழை பெய்யக்கூடும். காற்றின் திசைவேகம் மணிக்கு 2 கி.மீ. முதல் 3 கி.மீ. வேகத்தில் கிழக்கிலிருந்து வீசக்கூடும். வெப்பநிலை குறைந்தபட்சம் 71.6 டிகிரி பாரன்ஹீட் முதல் அதிகபட்சம் 91.4 டிகிரி பாரன்ஹீட் வரையும், காற்றின் ஈரப்பதம் குறைந்தபட்சம் 70 சதம் முதல் அதிகபட்சம் 85 சதம் வரை இருக்கும்.

    கோழிப்பண்ணையாளர்களுக்கு..: வடகிழக்குப் பருவமழை பரவலாக பெய்துள்ளதால் அதிக ஈரமும், குளிரும் கொண்ட வானிலை நிலவும். இதனால் பண்ணைகளில் தீவன மூலப்பொருள்களின் தரம் பாதிக்க வாய்ப்புள்ளது. நனைந்த, அதிக ஈரப்பதமுள்ள மூலப்பொருள்களைப் பயன்படுத்தக் கூடாது. தீவனத்தில் பூஞ்சான நச்சுமுறிவு, ஈரல் செயல்திறன் கூட்டும் மருந்துகளைச் சேர்க்கலாம். தயாரிக்கப்பட்ட தீவனத்தை உலர்ந்த தரை, சுவர் உள்ள அறைகளில் தாற்காலிகமாக வைக்க வேண்டும். உயர்மனை கோழிப் பண்ணைகளின் பக்கவாட்டில் படுதாவைப் பயன்படுத்தவும் வேண்டும்.

    கோழியின நோய் ஆய்வகத்தில் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கோழிகள் பெரும்பாலும் குடல்புண், ரத்தக் கழிச்சல், இறக்கை அழுகல், மேல்மூச்சுக்குழாய் நோய்களால் இறந்திருப்பது தெரியவந்துள்ளது. எனவே, பண்ணையாளர்கள் நோய்க்குரிய சிகிச்சை முறைகளுடன் பண்ணை உயிர்ப் பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடிக்கவும், தீவன

    மூலப்பொருள்களில் கிளாஸ்ட்ரிடியம் கிருமியின் மாசுபாட்டை கண்டறிந்து தரமான மூலப்பொருள்களைப் பயன்படுத்தவும் வேண்டும்.

    வேளாண் விவசாயிகளுக்கு..: தற்போது சின்ன வெங்காயம் நடவு செய்யும் பருவம் என்பதால் பூஞ்சான, பாக்டீரியா நோய்களிலிருந்து குமிழ்களைப் பாதுகாக்க விதை நேர்த்தி செய்து விதைப்பது அவசியமாகும். ஒரு ஏக்கருக்கு நடவு செய்ய 500 கிலோ விதை வெங்காயம் தேவைப்படும். எனவே, ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைகோடெர்மாவிரிடி, 10 கிராம் சூடோமோனாஸ் ப்ளூரசன்ஸ் என்ற அளவில் விதைப்பதற்கு ஒருநாள் முன்பே கலந்து விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai