சுடச்சுட

  

  குத்துச் சண்டை:அரசுப் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்

  By நாமக்கல்  |   Published on : 15th November 2014 03:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மண்டல அளவிலான குத்துச் சண்டை போட்டியில் நாமக்கல் மாவட்டம் கோனூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று சிறப்பிடம் பிடித்தனர்.

  ஈரோடு மண்டல அளவிலான குத்துச்சண்டை போட்டி நாமக்கல் பாரதி மெட்ரிக் பள்ளியில் அண்மையில் நடைபெற்றது. நாமக்கல், ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில், மூத்தோர் பிரிவில் நாமக்கல் கோனூர் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி ஜெயந்தி வெண்கலப் பதக்கம் வென்றார். இளையோர் பிரிவில் தமிழ்வாணன் வெண்கலப் பதக்கம் பெற்றார். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளைப் பள்ளித் தலைமையாசிரியர் மலர்விழி, கிராம கல்விக் குழுத் தலைவர் பொன்னுவேல் உள்ளிட்டோர் பாராட்டினர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai