சுடச்சுட

    

    குமாரபாளையம் வாரச் சந்தையை சூழ்ந்த மழை நீர்

    By குமாரபாளையம்  |   Published on : 15th November 2014 03:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குமாரபாளையத்தில் பெய்த பலத்த மழை காரணமாக வாரச்சந்தையில் மழைநீர் தேங்கியதால் வியாபாரிகளும், பொதுமக்களும் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.

    குமாரபாளையம் - எடப்பாடி சாலையில் சின்னப்பநாயக்கன்பாளையத்தில் நகராட்சி வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. வாரந்தோறும் வெள்ளிக்கிழமை சந்தை நடைபெறும்.

    சந்தை நடைபெறும் பகுதி மட்டுமல்லாமல் எடப்பாடி சாலையோரங்களில் கடைகள் அமைக்கப்படும். இச்சந்தையில் 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடைகள் அமைத்து வியாபாரம் செய்வர். குமாரபாளையம் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை முதல் தொடர்ந்து விட்டுவிட்டு மழை பெய்ததால் சந்தை வளாகத்தில் மழைநீர் குட்டையாக தேங்கி நின்றது.

    இதனால், வியாபாரிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். கடைகளுக்கு முன்பும், நடைபாதைகளிலும் மழைநீர் தேங்கி நின்றது. இதனால், சந்தைக்கு வந்த பொதுமக்கள் கடைகளுக்குச் செல்ல முடியாமல் தவித்தனர்.

    இதையடுத்து, ஆங்காங்கே மழைநீர் வெளியேறும் வகையில் வாய்க்கால் வெட்டி வெளியேற்றினர். இருந்தபோதிலும் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் தேங்கியிருந்தது.

    சந்தை வியாபாரிகள் கூறும்போது, பெரும்பாலான இடங்களில் இயங்கும் வாரச்சந்தைகளில் வியாபாரிகள், பொதுமக்கள் வசதிக்காக மேடையும், மேற்கூரையும் அமைக்கப்பட்டு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால், நீண்ட காலமாக இயங்கும் இந்தச் சந்தையில் எவ்வித வசதியும் இல்லை. எனவே, பொதுமக்கள் நலன் கருதி வாரச் சந்தையைச் சீர்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai