சுடச்சுட

  

  ராசிபுரம் வித்யா நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ, மாணவிகள் ஜவாஹர்லால் நேரு, மகாத்மா காந்தி வேடமணிந்து வந்திருந்தனர்.

  விளையாட்டு, நாடகங்கள், ஆடல், பாடல், ஆடை அலங்கார அணிவகுப்பு உள்ளிட்டவை நடைபெற்றன.

  பள்ளி இயக்குநர்கள், முதல்வர், ஆசிரியர், ஆசிரியைகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  வெற்றி விகாஸ் பள்ளியில் பேச்சுப் போட்டி: சேலம் மாவட்டம், ஒய்.எம்.சி.ஏ. அமைப்பு சார்பில், நேரு பிறந்தநாளை முன்னிட்டு தூய்மையும் பசுமையும் இந்தியாவை உருவாக்குவதில் மாணவர்களின் பங்கு என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான ஆங்கில பேச்சுப் போட்டியை ராசிபுரம் வெற்றி விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடத்தியது.

  இப்பள்ளி மாணவர் எம். மோகன்நிதி தமிழ் பேச்சுப் போட்டியில் முதல் இடத்தையும், ராகுல் இரண்டாம் இடத்தையும், ஆங்கில பேச்சுப் போட்டியில் மாணவி எம்.சுவேதா முதல் இடத்தையும் பிடித்தனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களைப் பள்ளி நிறுவனர் எஸ்.குணசேகரன், தலைவர் எஸ். கணேசன், தாளாளர் ஜி.வெற்றிச்செல்வன், செயலர் சி.பாலசுப்பிரமணியன், துணைச் செயலர் யு.கே.சிற்றரசன், பொருளாளர் கே.பழனிவேல், தலைமையாசிரியர் ஆர்.சாம் டேனியல் அற்புதராஜ் ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினர்.

  நாமக்கல்: தேசிய குழந்தைகள் தினம் நாமக்கல் மாவட்ட பள்ளிகளில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

  ரெட்டிப்புதூர் ஸ்ரீகுருகுலம் மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளியில் நடைபெற்ற விழாவில் கென்யா, ருவான்டா நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று தங்கள் நாட்டு பாரம்பரிய நடனம் ஆடியும், பாடல்களைப் பாடியும் குழந்தைகளை மகிழ்வித்தனர்.

  பள்ளி மாணவர்களுடன் சிறப்பு விருந்தினர்கள் கலந்துரையாடினர். மேலும், மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசளிக்கப்பட்டன.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai