சுடச்சுட

    

    குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராக விழிப்புணர்வுப் பேரணி நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    தேசிய குழந்தைகள் தினத்தையொட்டி நாமக்கல் பிஜிபி கலை அறிவியல் கல்லூரி, சென்னை பிஜிபி கல்வி நல அறக்கட்டளை ஆகியவை இணைந்து இந்தப் பேரணியை நடத்தின. நாமக்கல் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய இந்தப் பேரணியை நாமக்கல் பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சிவக்குமார் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

    பேரணி அண்ணா சிலை, மணிக்கூண்டு, திருச்சி சாலை வழியாக மீண்டும் அரசு ஆண்கள் பள்ளியை அடைந்தது. பேரணியின்போது குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராக மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர்.

    பிஜிபி கலை அறிவியல் கல்லூரி, நர்சிங் கல்லூரி, ஃபார்மசி கல்லூரி, பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, கல்வியியல் கல்லூரி ஆகியவற்றைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

    பேரணிக்கு அறக்கட்டளைத் துணைத்தலைவர் விசாலாட்சி பெரியசாமி தலைமை வகித்தார். பிஜிபி கல்வி நிறுவனங்களின் செயலர் கந்தசாமி முன்னிலை வகித்தார். தாளாளர் மு.கணபதி வரவேற்றார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai