சுடச்சுட

    

    பரமத்தி வேலூர் வட்டம், கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம், கபிலர்மலையில் நாமக்கல் மாவட்ட மக்கள், செய்தி தொடர்புத் துறை சார்பில் தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த புகைப்பட கண்காட்சி வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.

    புகைப்பட கண்காட்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் தட்சிணாமூர்த்தி திறந்து வைத்துப் பார்வையிட்டார். இதில் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் சாமிநாதன், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கோமதி, துரைசாமி, கபிலக்குறிச்சி ஊராட்சி மன்றத் தலைவர் கலாராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தமிழக அரசின் திட்டங்கள், சாதனைகள், முக்கிய நிகழ்வுகள், சட்டப்பேரவைத் தலைவர், தொழில்துறை அமைச்சர், மாவட்ட ஆட்சியர், மக்களவை உறுப்பினர் ஆகியோர் பங்கேற்ற அரசு நலத்திட உதவிகள் ஆகியவை குறித்த புகைப்படங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன.

    இக் கண்காட்சியை சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai