சுடச்சுட

    

    நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே மின்சாரம் பாய்ந்ததில் தம்பதி உயிரிழந்தனர். காயமடைந்த மகன், மகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    பரமத்தி வேலூர் அருகே உள்ள பாலப்பட்டி எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (44). கோரை அறுக்கும் கூலித் தொழிலாளி. இவர் வெள்ளிக்கிழமை மாலை வீட்டுக்கு வெளியிலிருந்த கம்பியில் துணிகளைக் காயப் போடும்போது, அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. மின் இணைப்பில் இருந்த கம்பி அறுந்து தொங்கிக் கொண்டிருந்ததாகவும், அதிலிருந்து மின்சாரம் கம்பியில் பாய்ந்ததாகவும் கூறப்படுகிறது.

    இதைப் பார்த்த அவரது மனைவி கோமதி (37), மகள் மைதிலி (16), மகன் சரவணன் ஆகியோர் அவரைக் காப்பாற்ற முயன்றனர். ஆனால், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    மேலும், மின்சாரம் பாய்ந்ததில் கோமதியும் உயிரிழந்தார். பலத்த காயமடைந்த மைதிலி, சரவணன் ஆகியோர் பாலப்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    சம்பவ இடத்துக்கு பரமத்தி வேலூர் டிஎஸ்பி உதயகுமார், காவல் ஆய்வாளர் ரங்கசாமி, வட்டாட்சியர் மாதேஸ்வரி ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai