சுடச்சுட

    

    மொபெட் மீது லாரி மோதியதில் மாணவர் சாவு

    By திருச்செங்கோடு,  |   Published on : 15th November 2014 03:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்செங்கோடு அருகே மொபெட் மீது லாரி மோதியதில் மாணவர் உயிரிழந்தார்.

    எலச்சிபாளையம் ஒன்றியம், அகரம் சீத்தக்காட்டைச் சேர்ந்தவர் ராஜா (40). இவரது மகன் சிவகுமார் (14). எலச்சிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். வெள்ளிக்கிழமை மாலை பள்ளி முடிந்ததும் மாணவர் சிவகுமாரை அவரது தந்தை மொபெட்டில் வீட்டிற்கு அழைத்துச் சென்றபோது அந்த வழியாக வந்த லாரி மொபெட் மீது மோதியது. இதில் மாணவர் அதே இடத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து எலச்சிபாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்த ராஜா திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai