சுடச்சுட

  

  குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்

  By நாமக்கல்/ திருச்செங்கோடு,  |   Published on : 16th November 2014 04:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  எலச்சிப்பாளையம் ஒன்றியம், பொம்மம்பட்டியிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

  விழாவில், பள்ளி மாணவ, மாணவிகள் தேசத் தலைவர்களின் வேடமணிந்து அவர்களின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைத்தனர்.

  செல்வம் கலை அறிவியல் கல்லூரி மாணர்கள் பள்ளிக் குழந்தைகளுக்குப் பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசளித்தனர். விழாவுக்கு பள்ளித் தலைமையாசிரியர் முகில்மதி தலைமை வகித்தார். ஆசிரியர்கள் சுரேஷ், சுப்புலட்சுமி, தமிழரசி, பன்பரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  குமாரபாளையத்தில்... குமாரபாளையம் நகராட்சி நாராயணாநகர் நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தினவிழாவை முன்னிட்டு, பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெள்ளிக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.

  முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் பிறந்த தினத்தையொட்டி நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமையாசிரியை பாரதி தலைமை வகித்தார். மாணவ, மாணவியருக்கு கதை, கட்டுரை, பேச்சு, ஓவியம், பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

  பள்ளியின் பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் என்.ஜெகதீஷ் மாணவ, மாணவியருக்கு பரிசுகளை வழங்கினார். பள்ளியின் ஆசிரியர்கள், பெற்றோர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

  திருச்செங்கோட்டில்...: திருச்செங்கோடு வட்டம், கணக்கப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

  விழாவிற்கு ஊராட்சித் தலைவர் சுஜாதா தங்கவேல் தலைமை வகித்தார். பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் பொன்னுசாமி, கிராமக் கல்விக் குழுத் தலைவர் ரங்கராஜன், சாமி பிரகாஷ், ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தலைமை ஆசிரியர் சந்திராம்பாள் வரவேற்றார். நேருவின் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

  இதை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, மாறுவேடப் போட்டி போன்றவை நடைபெற்றன. வெற்றி பெற்றவர்களுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன. ஆசிரியர் பழனிவேலு நன்றி கூறினார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai