சுடச்சுட

    

    புதுச்சத்திரம் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டதாக மூவரை போலீஸார் கைது செய்தனர்.

    நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் கடைவீதி, உடுப்பம், குருசாமிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஓராண்டுக்கு முன்பு கோயில், செல்போன் கடை, வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடப்பட்டது. இச்சம்பவங்கள் குறித்து புதுச்சத்திரம் காவல்நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில், புதுச்சத்திரம் காவல் ஆய்வாளர் ஈஸ்வரமூர்த்தி தலைமையிலான போலீஸார் நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை நிறுத்தி நடத்திய விசாரணையில், அவர்கள் நாமக்கல் கணேசபுரம் பகுதி புதுதெருவைச் சேர்ந்த சுபாஷ்(22), அருணாசலம்(19), பங்களா தெருவைச் சேர்ந்த ஸ்ரீராம்(18) என்பதும் புதுச்சத்திரம் பகுதியில் நடைபெற்ற தொடர் திருட்டுச் சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் போலீஸார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai