சுடச்சுட

    

    பள்ளிப்பாளையத்தில் வளர்ச்சிப் பணிகள் தொடக்கி வைப்பு

    By நாமக்கல்,  |   Published on : 16th November 2014 04:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பள்ளிப்பாளையம் பகுதியில் ரூ.19.50 லட்சத்தில் மேற்கொள்ளப்பட உள்ள வளர்ச்சிப் பணிகளைத் தமிழக தொழில்துறை அமைச்சர் பி.தங்கமணி சனிக்கிழமை தொடக்கி வைத்தார்.

    சட்டப்பேரவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.4.50 லட்சம் செலவில் பள்ளிப்பாளையம் நகராட்சி அக்ரஹாரம் பகுதியில் பேருந்து நிழல்கூடம், பொதுநிதித் திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் செலவில் சுத்திகரிப்பு நிலையத்துக்குப் பாதுகாப்புச் சுவர்,

    12-வது வார்டில் ரூ.5 லட்சம் செலவில் கான்கிரீட் சாலை ஆகிய பணிகளைத் தமிழக தொழில் துறை அமைச்சர் பி.தங்கமணி, சனிக்கிழமை பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    ஒன்றியத் தலைவர் செந்தில், நகர்மன்றத் தலைவர் வெள்ளியங்கிரி, துணைத் தலைவர் சுப்பிரமணியம், பொறியாளர் அலாவுதீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai