சுடச்சுட

  

  ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம் சார்பில் 61-ஆவது கூட்டுறவு வார விழாவைத் தொடர்ந்து மரக்கன்றுகள் நடும் விழா கவுண்டம்பாளையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

  ராசிபுரம் வேளாண்மை கூட்டுறவு விற்பனைச் சங்கத் தலைவர் எஸ்.பி.தாமோதரன் தலைமை வகித்தார். கூட்டுறவுத் துறை துணைப் பதிவாளர் கோ.எழிலரசி வரவேற்றார்.

  ராசிபுரம் நகர கூட்டுறவு வங்கித் தலைவர் வி.திருப்பதி, ராசிபுரம் நகர்மன்ற துணைத் தலைவர் எஸ்.வெங்கடாசலம், நகர வங்கி துணைத் தலைவர் என்.கிருஷ்ணமூர்த்தி, நகர வங்கி மேலாண்மை இயக்குநர் வீ.மனோன்மணி, சார்-பதிவாளர்கள் பி.பொன்னுசாமி, மீனாட்சி, ஆ.நெடுஞ்செழியன், நகர கூட்டுறவு வங்கி பொதுமேலாளர் ஜி.பெரியசாமி, கூட்டுறவு விற்பனைச் சங்க செயலாளர் ஐ.வரதராஜன், மேலாளர் எஸ்.வரதராஜன், சங்க இயக்குநர் ராதா சந்திரசேகரன், வடுகம் பாலன் ஆகியோர் மரம் நடுதலின் அவசியம் குறித்துப் பேசினர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai