Enable Javscript for better performance
ஊதிய உயர்வு கோரி கிராம உதவியாளர்கள் சங்கம் தீர்மானம்- Dinamani

சுடச்சுட

    

    ஊதிய உயர்வு கோரி கிராம உதவியாளர்கள் சங்கம் தீர்மானம்

    By பரமத்தி வேலூர்,  |   Published on : 17th November 2014 05:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரமத்திவேலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு கிராம உதவியாளர்கள் சங்க சிறப்புக் கூட்டத்தில் ஊதிய உயர்வு வழங்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் சங்கத்தின் சார்பில், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களின் சிறப்புக் கூட்டம் பரமத்திவேலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்திற்கு சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளர் லட்சுமணன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் இளங்கோவன் வரவேற்றுப் பேசினார்.

    மாநிலத் தலைவர் காண்டீபன், மாநில பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன், மாநிலப் பொருளாளர் மதனகோபால் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு பேசினர்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

    கிராம உதவியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான நான்காம் நிலை ஊதிய உயர்வை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும்.

    கிராம உதவியாளர்களை அரசு உத்தரவுக்கு புறம்பாக இரவு காவல் பணியிலும், அலுவலகப் பணியிலும் ஈடுபடுத்தும் திருச்சி, நாமக்கல், காஞ்சிபுரம்,திருவள்ளூர், புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகங்களை வன்மையாகக் கண்டிப்பது, மேலும், இதுதொடர்பாக அந்தந்த மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் சங்கத்தின் மாவட்ட, வட்டார நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மாவட்டப் பொருளாளர் ஜெயபிரகாஷ் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai