சுடச்சுட

  

  குமாரபாளையம் காவல் நிலையத்தில் தகராறில் ஈடுபட்ட சகோதரர்கள் கைது

  By குமாரபாளையம்  |   Published on : 17th November 2014 05:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  குமாரபாளையம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளரிடம் தகராறில் ஈடுபட்ட சகோதரர்களை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

  நாமக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் உத்தரவின் பேரில், தலைக்கவசம் அணியாமல் மோட்டார்சைக்கிளை ஓட்டிச் செல்வோர் மீது குமாரபாளையத்தில் நான்கு இடங்களில் வாகனச் சோதனை நடத்தி வழக்குப் பதிவு செய்தனர்.

  குமாரபாளையம் காவல் நிலையம் முன் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வேலாயுதம், தலைமைக் காவலர் தமிழரசன் ஆகியோர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அம்மன் நகரைச் சேர்ந்த லட்சுமணன், தலைக்கவசம் அணியாமல் வந்ததால் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து, குமாரபாளையம் நகராட்சி அருகேயுள்ள மோட்டார்சைக்கிள் பழுதுநீக்கும் கடை நடத்தி வந்த ஜெயக்குமாருக்கு செல்போனில் தகவல் தெரிவித்தாராம். இதையடுத்து, ஜெயக்குமார் (28), நகராட்சிக்கு எதிரில் சைக்கிள் கடை வைத்திருக்கும் இவரின் அண்ணன் தண்டபாணி (32) ஆகியோர் காவல் நிலையத்திற்கு வந்தனர்.

  மேலும், போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, பணி செய்ய விடாமல் தடுத்து தகராறில் ஈடுபட்டனராம். இதனால், குமாரபாளையம் போலீஸார் தகராறில் ஈடுபட்ட சகோதரர்கள் ஜெயக்குமார், தண்டபாணி ஆகியோரைக் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai