Enable Javscript for better performance
சாலை விபத்தில் கல்லூரி மாணவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    திருச்செங்கோடு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.

    திருச்செங்கோடு அருகேயுள்ள பெரிய மணலியைச் சேர்ந்தவர் சதீஷ் (21). இவர் ராசிபுரம் அரசுக் கலைக் கல்லூரியில் இளநிலை ஆங்கில இலக்கியம் படித்து வந்தார். சனிக்கிழமை இவர் கல்லூரியிலிருந்து வீட்டிற்கு பைக்கில் சென்றார். பின் இருக்கையில் இவரது வகுப்புத் தோழர் முருகேசன் (21) அமர்ந்திருந்தார்.

    சேர்வாமபட்டி என்ற இடத்தில் அவரது பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த மின் மாற்றியில் மோதியது. இதில், பலத்த காயமடைந்த சதீஷ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முருகேசன் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

    இந்தச் சம்பவம் குறித்து எலச்சிபாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai