Enable Javscript for better performance
திருச்செங்கோடு அருகே வெள்ளிக் காசுகள் புதையல்- Dinamani

சுடச்சுட

    

    திருச்செங்கோடு அருகே வெள்ளிக் காசுகள் புதையல்

    By திருச்செங்கோடு,  |   Published on : 17th November 2014 05:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே வெள்ளிக் காசு புதையல் ஞாயிற்றுக்கிழமை கிடைத்தது.

    திருச்செங்கோடு அருகேயுள்ள குமரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (46). விசைத் தறித் தொழிலாளியான இவர், தனது வீட்டிற்கு கழிப்பறை கட்ட ஞாயிற்றுக்கிழமை நிலத்தைத் தோண்டினார். கூலியாள்களைக் கொண்டு சுமார் 5 அடி ஆழம் தோண்டியதும் மாலை 5 மணியளவில் வெள்ளிக் காசுகள் தட்டுப்பட்டன. உடனே திருச்செங்கோடு வருவாய் அலுவலகர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

    இதையடுத்து, வருவாய்க் கோட்டாட்சியர் சுமன், வட்டாட்சியர் குப்புசாமி, அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் வெள்ளிக் காசுகள் கிடைத்த இடத்தில் ஆள்களைக் கொண்டு தோண்டினர். அப்போது நூற்றுக்கணக்கான வெள்ளிக் காசுகள் கிடைத்தன. இரவிலும் தோண்டும் பணி தொடர்ந்தது. அந்த இடத்தில் இரவில் வெளிச்சத்துக்காக விளக்குகள் அமைக்கப்பட்டன. இந்த இடம் பழைமையான பாண்டீஸ்வரன் கோயிலுக்கு மேற்குப்புறம் அமைந்துள்ளது.

    கிடைத்த வெள்ளிக் காசுகள் ஒரு ரூபாய் காசுகளாகும். அவை 1835, 1840ஆம் ஆண்டுகளைச் சார்ந்தவையாகும்.

    1835ஆம் ஆண்டு காசுகளில் நாலாவது வில்லியம் என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டு, அவரது தலை உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. 1840ஆம் ஆண்டு காசுகளில் விக்டோரியா மகாராணி என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் வசித்தவர்கள் திருடர்களுக்குப் பயந்து நிலத்தில் காசுகளைப் புதைத்து வைத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    திருச்செங்கோட்டில் புதையல் கிடைத்த சம்பவம் வேகமாகப் பரவியது. இதையடுத்து, அந்த இடத்தில் திரளாக மக்கள் குவிந்தனர். இதனால், அங்கு போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai