சுடச்சுட

    

    முதியோர்கள் பொருள்கள் வாங்க சிறப்பு ஏற்பாடு செய்ய வலியுறுத்தல்

    By நாமக்கல்,  |   Published on : 17th November 2014 05:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நியாய விலைக் கடைகளில் முதியோர்கள் பொருள்கள் வாங்கச் சிறப்பு ஏற்பாடு செய்துதர வேண்டும் என ஓய்வுபெற்ற அலுவலர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

    தமிழக அரசு ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்கத்தின் நாமக்கல் வட்டக் கிளை மாதாந்திரக் கூட்டம் சேந்தமங்கலத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. வட்டக் கெளரவத் தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் பழனிமுத்து, வட்டத் தலைவர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டச் செயலர் ராஜன் வரவேற்றார்.

    கூட்டத்தில், சங்கத் துணைச் செயலராக ராமசாமி, துணைத் தலைவராக நாகமுத்து ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பொருளாளர் விஸ்வநாதன் வரவு - செலவு அறிக்கை வாசித்தார். நியாய விலைக் கடைகளில் முதியோர்கள் பொருள்கள் வாங்கச் சிறப்பு ஏற்பாடு செய்ய வேண்டும். முதியோர் உதவித்தொகை வாங்கும் முதியோர்களுக்கு பொருள்கள் வழங்கும் அதே நாளில் பணி ஓய்வு பெற்றவர்களுக்கும் பொருள்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இணைச் செயலர் சுப்பையன் நன்றி கூறினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai