குள்ளநாயக்கன்பாளையத்தில் நோய் கண்டறியும் முகாம்
By குமாரபாளையம், | Published on : 18th November 2014 04:08 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
குமாரபாளையத்தை அடுத்த குள்ளநாயக்கன்பாளையம் காலனியில் இலவச நோய் கண்டறியும் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது .
அன்பு செவிலியர் கல்லூரி சார்பில் இறுதியாண்டு மாணவ, மாணவியர் இம்முகாமில் பங்கேற்று பரிசோதனை மேற்கொண்டனர். இதில், 60-க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
நோய் கண்டறியப்பட்டோர் கல்லாங்காட்டுவரசு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பரிந்துரை செய்து அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், முகாமில் பங்கேற்றோருக்கு சுகாதாரக் கல்வியும் வழங்கப்பட்டது.