சுடச்சுட

    

    தடகளப் போட்டியில் சாதனை: போலீஸாருக்கு பாராட்டு

    By நாமக்கல்  |   Published on : 18th November 2014 04:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாநில அளவிலான தடகளப் போட்டியில் பதக்கம் வென்று சாதனை படைத்த, போலீஸாருக்கு நாமக்கல் மாவட்ட எஸ்.பி. எஸ்.ஆர்.செந்தில்குமார் திங்கள்கிழமை பாராட்டு தெரிவித்தார்.

    போலீஸாருக்கான மாநில அளவிலான 54-வது தடகளப் போட்டிகள் மதுரையில் அண்மையில் நடைபெற்றன. இப்போட்டிகளில் பங்கு பெற்ற நாமக்கல் ஆயுதப்படையைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் ஆனந்தலட்சுமி 5 கிலோமீட்டர் நடைபோட்டி மற்றும் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கமும், பெண் காவலர் அருள்மொழி 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதலில் தங்கப் பதக்கமும், தொடர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.

    நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்தில், முதல்நிலைக் காவலராகப் பணிபுரியும் பவளக்கொடி ஈட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கமும், குண்டு எறிதலில் வெண்கலப் பதக்கமும் பெற்றார்.

    மேலும் அதே காவல் நிலையத்தைச் சேர்ந்த அமுதா, குண்டு எறிதலில் தங்கப் பதக்கமும், திருச்செங்கோடு போக்குவரத்துப் பிரிவு பெண் காவலர் ராணி, 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கமும் பெற்றனர்.

    மேலும், சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 12 கிலோமீட்டர் மினி மாரத்தான் போட்டியில், நாமக்கல் மாவட்ட ஆயுதப்படைக் காவலர் மகேஷ் தங்கப் பதக்கம் பெற்றார். பதக்கங்கள் பெற்ற போலீஸாரை நாமக்கல் மாவட்ட எஸ்.பி எஸ்.ஆர்.செந்தில்குமார் திங்கள்கிழமை வாழ்த்தினர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai