சுடச்சுட

    

    தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கப் பதவிகளுக்கு தேர்தல் அறிவிப்பு

    By திருச்செங்கோடு  |   Published on : 18th November 2014 04:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கப் பொறுப்பாளர்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

    2015-16 ஆகிய இரு ஆண்டுகளுக்கு பொறுப்பாளர்கள் பதவியில் இருப்பார்கள். பொறுப்பாளர்கள் பற்றிய விவரம்:

    மாவட்டத் தலைவர், மாவட்டச் செயலர், மாவட்டப் பொருளர் தலா ஓர் இடம். மாவட்டத் துணைத் தலைவர்கள் (நகர்) 2 இடம், மாவட்டத் துணைத் தலைவர்கள் (புறநகர் )2 இடம், மாவட்ட இணைச் செயலர்கள் (நகர் ) 2 இடம், மாவட்ட இணைச் செயலர்கள் (புறநகர்) 2 இடம். வேட்பு மனுத் தாக்கல் செய்ய வேண்டிய தேதி 19.11.14 மற்றும் 20.11.14. வேட்பு மனு பரிசீலனை-21.11.2014. வேட்பு மனு வாபஸ் பெறும் நாள்: 22.11.2014 மாலை 5 மணி வரை. இறுதி வேட்பாளர் அறிவிப்பு: 22.11.2014 (மாலை 6). தேர்தல் நாள்: 27.11.2014. தேர்தல் நடைபெறும் இடம்: அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நாமக்கல். வாக்குப் பதிவு நேரம்: மாலை 6 முதல் 8.30 வரை. வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிப்பு: 27.11.2014 இரவு 9 மணிக்கு மேல்.

    இந்தத் தேர்தலை திருச்செங்கோடு, ராசிபுரம், பரமத்தி, நாமக்கல் ஆகிய வட்டங்களுக்கு தலைமை இடத்து துணை வட்டாட்சியர்களும், கொல்லிமலை வட்டத்திற்கு வட்ட வழங்கல் அலுவலரும், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எச் பிரிவு தலைமை உதவியாளரும் தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமனம் செய்யப்படுகிறார்கள். தேர்தலை எந்தப் பிரச்னையும் இன்றி நல்லமுறையில் நடத்திக்கொடுக்குமாறு திருச்செங்கோடு மண்டல துணை வட்டாட்சியர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் ஆர். ருக்மணி கேட்டுக்கொண்டார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai