சுடச்சுட

  

  பரமத்தி வேலூர் நகர்ப்புறங்களில் இருந்து செல்லும் சாக்கடை கழிவு நீர், ராஜா வாய்க்கால் உள்பட 5 இடங்களில் கலந்து வருவதாகவும், இதனால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதாகவும் கூறி பாட்டாளி மக்கள் கட்சியினர் சார்பில் திங்கள்கிழமை வேலூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

  பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் பி.ரமேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட வன்னியர் சங்கச் செயலாளர் சித்தார்த்தன், சி.ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  பரமத்தி வேலூரில் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவு நீர் ஜேடர்பாளையம் காவிரியாற்றில் இருந்து பிரிந்து வரும் ராஜா வாய்க்காலில் கலந்து வருகிறது. இந்த ராஜா வாய்க்கால் பாசனத்தை நம்பி வாழை, கோரை, வெற்றிலை, கரும்பு உள்ளிட்டவை பயிர் செய்கின்றனர். மேலும் மேய்ச்சலுக்காக செல்லும் கால்நடைகள் இந்த ராஜா வாய்க்கால் நீரை குடிக்கின்றன. சாக்கடை கழிவு நீர் கலப்பதால் விளை நிலங்களில் இருந்து உற்பத்தி குறைவதாகவும், கால்நடைகளுக்கு பல்வேறு நோய்கள் தொற்றிக் கொள்வதாகவும், சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு வருவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்களை எழுப்பினர்.

  பொதுமக்கள், விவசாயிகள், பாட்டாளி மக்கள் கட்சியினர், வன்னியர் சங்கத்தினர் மற்றும் பசுமைத் தாயகத்தைச் சேர்ந்த பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். வேலூர் பேரூர் கழகச் செயலாளர் ராஜேஷ் நன்றி கூறினார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai