சுடச்சுட

    

    பரமத்தி வேலூர் வட்டத்தில் வாகனச் சோதனை: 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு

    By பரமத்தி வேலூர்,  |   Published on : 18th November 2014 04:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரமத்தி வேலூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சரகத்திற்கு உள்பட்ட 5 காவல் நிலையப் பகுதிகளில் போலீசார் கடந்த மூன்று தினங்களாக நடத்திய வாகனச் சோதனையில் இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

    வேலூர், ஜேடர்பாளையம், பரமத்தி, நல்லூர் மற்றும் வேலகவுண்டம்பட்டி ஆகிய காவல் நிலையப் பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

    மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல், வாகன உரிமம், வாகனக் காப்பீடு, செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுதல், ஒரே வாகனத்தில் இரண்டுக்கும் மேற்பட்டோர் செல்லுதல் உள்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளன.

    மேலும் புதுப்பட சிடிக்களை உரிமம் இல்லாமல் விற்பனை செய்தது, பணம் வைத்து சூதாடியது, அனுமதியின்றி மது விற்பனை செய்தது உள்ளிட்ட வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. இதுபோன்ற வாகனச் சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என பரமத்தி வேலூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் உதயகுமார் தெரிவித்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai