சுடச்சுட

  

  பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 1,270 மனுக்கள் ஏற்பு

  By நாமக்கல்  |   Published on : 18th November 2014 04:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 1,270 மனுக்கள் ஏற்கப்பட்டன.

  பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

  கூட்டத்தில் பல்வேறு உதவித் தொகைகள், புதிய குடும்ப அட்டைகள், அடிப்படை வசதி, மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 1,270 மனுக்கள் பெறப்பட்டன.

  இந்த மனுக்கள் மீது துரித நடவடிக்கையெடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

  சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதல்வரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் நாமக்கல் வட்டத்தைச் சேர்ந்த 209 குழந்தைகளுக்கு ரூ.5.72 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித்தொகை, ராசிபுரம் வட்டத்தைச் சேர்ந்த 45 குழந்தைகளுக்கு ரூ.76,650 மதிப்பிலான கல்வி உதவித்தொகை என மொத்தம் 254 குழந்தைகளுக்கு ரூ.6,48,650 மதிப்பிலான கல்வி உதவித்தொகை மற்றும் வழங்கல் துறை சார்பில் நாமக்கல் வட்டத்தைச் சேர்ந்த 20 பேர், திருச்செங்கோடு வட்டத்தைச் சேர்ந்த 40 பேர் என மொத்தம் 60 பேருக்கு புதிய குடும்ப அட்டையை ஆட்சியர் வழங்கினார்.

  பணியின் போது உயிரிழந்த, படை வீரர்களின் வாரிசுகள் 3 பேருக்கு வாரிசு அடிப்படையில் பணி நியமன ஆணை என மொத்தம் 316 பேருக்கு ஆட்சியர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

  மாவட்ட வருவாய் அலுவலர் வே.ரா.சுப்புலட்சுமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மனோகரன், கோட்டாட்சியர் க.காளிமுத்து, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் எஸ்.சூரியபிரகாஷ், மாவட்ட வழங்கல் அலுவலர் எஸ்.ராமகிருஷ்ணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் எஸ்.ராஜேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai