சுடச்சுட

  

  நாமக்கல் மாவட்டத்தில் போலீஸார் 2 நாள்கள் தொடர்ந்து நடத்திய வாகனச் சோதனையில், மோட்டர் வாகன விதிமீறல் தொடர்பாக 7,626 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

  நாமக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஆர்.செந்தில்குமார் மேற்பார்வையில், மாவட்டத்தில் கடந்த 15ஆம் தேதி காலை தொடங்கி 16ஆம் தேதி இரவு வரை தொடர்ந்து 2 நாள்கள் வாகனச் சோதனை நடைபெற்றது. அப்போது, 7,626 மோட்டார் வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில் 202 பேர் மீது மதுபோதையில் வாகனம் ஓட்டியதற்காகவும், 79 பேர் மீது அதிவேகமாக வாகனம் ஓட்டியதற்காகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

  மேலும் 17 பிடியாணை மீது நடவடிக்கையெடுக்கப்பட்டது. 79 முன்னெச்சரிக்கை நடவடிக்கை வழக்குகள், 78 மதுவிலக்கு வழக்குகள், புதுப்பட சிடிக்கள் விற்பனை, தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை, சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai