சுடச்சுட

    

    ராசிபுரம் நகர நாயுடுகள் சங்க இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம்

    By ராசிபுரம்,  |   Published on : 18th November 2014 04:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராசிபுரம் நகர நாயுடுகள் சங்க இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை ராசிபுரத்தில் நடைபெற்றது.

    சங்கத் தலைவர் கே.கோவிந்தராஜுலு தலைமை வகித்தார். சங்க நிர்வாகிகள் என்.ஆர்.ராமதாஸ், என்.பாலசுப்பிரமணியன், கண்ணன், நீலாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சங்க வளர்ச்சி, சந்தா சேர்ப்பு, சமூக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, தொழில், கல்வி உதவி, திருமணத் தகவல் மையம் ஏற்படுத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    ஒவ்வொரு மாதமும், 2-ம் சனிக்கிழமை செயற்குழுக் கூட்டம் நடத்தவும், மூன்று மாதத்திற்கு ஒருமுறை பொதுக் குழுக் கூட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. வரும் ஆண்டில் யுகாதி பெருவிழாவைச் சிறப்பாக நடத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    ஆர்.சிட்டிபாபு தலைமையில், 41 பேர் கொண்ட புதிய இளைஞர் அணி நிர்வாகக் குழு ஏற்படுத்தி செயல்படவும் முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் இளைஞரணி சங்க நிர்வாகிகள் கே.புகழேந்தி, எஸ்.பாலாஜி, பேராசிரியர் ஆர்.சிவக்குமார், பி.சக்திவேல், ஆட்டோ ஒட்டுநர்கள் சங்கத் தலைவர் எஸ்.ஆர்.சீனிவாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai