சுடச்சுட

    

    ராசிபுரம் அருகே, இளம் வயது திருமணத்தை அதிகாரிகள் தடுத்தி நிறுத்தினர்.
     ராசிபுரம் அருகே, புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர் ஞானமணி. தொழிலாளி. கல்லூரியில் படித்து வந்த இவரது மகளை அதே பகுதியைச் சேர்ந்த 42 வயதான ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்தனர்.
     இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலகுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, மைய அலுவலர்கள் புதுப்பாளையத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் இளம்வயது திருமணம் நடைபெற உள்ளது தெரிய வந்தது. இதையடுத்து, அதிகாரிகள் பெற்றோரிடம் பேசி திருமணம் செய்து வைக்கமாடோம் என்று எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்கி திருமணத்தை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, அந்த மாணவி நாமக்கல் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு மையம் முன் ஆஜர்படுத்தப்பட்டார்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai