சுடச்சுட

    

    திருச்செங்கோடு அருகே  கோயிலில் விநாயகர் சிலை சேதம்

    By  திருச்செங்கோடு  |   Published on : 19th November 2014 01:08 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்செங்கோடு அருகே, கோயிலில் இருந்த விநாயகர், மூஷிக வாகன சிலைகள் சேதப்படுத்தப்பட்டன.
     திருச்செங்கோடு அருகே, சிறுமொளசியில் சமத்துவபுரம் உள்ளது. இதன் நுழைவு வாயிலின் இடது புறம் விநாயகர் கோயில் உள்ளது. இங்கு விநாயகர், நாகர், மூஷிக வாகனச் சிலைகளை வைத்து 12 ஆண்டுகளாக பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். கோயிலில் அமாவாசை, கிருத்திகை, சங்கடஹரசதுர்த்தி போன்ற விஷேச நாள்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
     இதில், அந்தப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபடுவர். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை கோயிலுக்குச் சென்ற பொதுமக்கள் விநாயகர் சிலையின் கைகள், காதுகள் உடைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதேபோல, மூஷிக வாகனத்தின் முகம் சிதைக்கப்பட்டிருந்தது. மேலும்,கோயில் சுவற்றில் அருள், புளியம்பட்டி என்று எழுதப்பட்டிந்தது.
     இதையடுத்து, அந்தப் பகுதி மக்கள் அங்கு கூடினர். சிலைகள் சேதப்படுத்தப்பட்டதற்கு, இந்து முன்னணி ஒன்றியச் செயலர் சக்திவேல், நகரத் தலைவர் சின்னுசாமி ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.
     இதனால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai