சுடச்சுட

    

    நத்துக்குழிப்பட்டியில் இன்று  சிறப்பு மனுநீதி நாள் முகாம்

    By  நாமக்கல்  |   Published on : 19th November 2014 01:18 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கொல்லிமலை அருகே, குண்டூர்நாடு, நத்துக்குழிப்பட்டியில், சிறப்பு மனுநீதி நாள் முகாம் புதன்கிழமை (நவ.19) நடைபெற உள்ளது.
     இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வ.தட்சிணாமூர்த்தி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
     மாவட்ட வருவாய் அலுவலர் சுப்புலட்சுமி தலைமையில், கொல்லிமலை வட்டம், குண்டூர்நாடு அருகே நத்துக்குழிப்பட்டியில் உள்ள சமுதாயக் கூடத்தில், சிறப்பு மனுநீதி முகாம் புதன்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.
     இதில், குண்டூர் நாடு, வளப்பூர்நாடு, வாழவந்திநாடு பகுதியைச் சேர்ந்த மக்கள், அரசின் பல்வேறு நலத் திட்ட உதவிகள் தொடர்பான கோரிக்கை மனுக்கள், பிரச்னைகள் குறித்தும் மனுக்கள் வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai