சுடச்சுட

  

  நாமக்கல் அருகே, வழிதவறி வந்த புள்ளிமானை நாய்கள் கடித்ததால் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது.
   நாமக்கல் அருகே, வலையப்பட்டிக்கு செவ்வாய்க்கிழமை காலை சுமார் ஒன்றரை வயதுள்ள ஆண் புள்ளி மான் வந்தது. அந்தப் பகுதி வனத்திலிருந்து வழிதவறி வந்த அந்த புள்ளிமானைக் கண்டதும் நாய்கள் துரத்தியுள்ளன. உயிர் பிழைக்க தப்பி ஓடிய போது, மானை நாய்கள் சுற்றிவளைத்து கடித்தன.
   அந்தப் பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில், வனத் துறையினர், காயமடைந்த புள்ளிமானை மீட்டு, நாமக்கல் கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி புள்ளிமான் உயிரிழந்தது. இதையடுத்து, மானை வனத் துறையினர் கொல்லிமலை வனப் பகுதியில் புதைத்தனர்.
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai