சுடச்சுட

    

    பொங்கல் பரிசு வழங்க  ஓய்வூதியர்கள் வலியுறுத்தல்

    By  ராசிபுரம்,  |   Published on : 19th November 2014 01:09 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஓய்வூதியர்களுக்கு ஒரு மாத ஓய்வூதியத்தை அரசு பொங்கல் பரிசாக வழங்க வேண்டும் என, ராசிபுரத்தில் நடைபெற்ற அரசு ஓய்வூதியர்கள் சங்க மாதந்திரக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
     கூட்டத்துக்கு சங்கத் தலைவர் சின்னுசாமி தலைமை வகித்தார். செயலர் சேரலாதன் கூட்ட அறிக்கை வாசித்தார். துணைத் தலைவர்கள் ஓபுளி செட்டி, இருசப்பன், மாதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளர் ருக்மாங்கதன் வரவு செலவு கணக்கை வாசித்தார்.
     இதில், வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு ஓய்வு ஊதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு ஒரு மாத ஓய்வூதியத்தை பொங்கல் பரிசாக வழங்க வேண்டும். குறைந்த பட்ச ஓய்வூதியமாக 3,500 வழங்க வேண்டும். தற்போது வழங்கப்பட்டு வரும் அகலவிலைப்படியில் 50 சதத்தை உயர்த்தி வழங்க வேண்டும். ஜனவரி 4-ஆம் தேதி சங்கத்தின் 35-ஆம் ஆண்டு தொடக்க விழாவும், ஓய்வூதியர்களின் உரிமை நாள் விழா, பாராட்டு விழா நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், இணைச் செயலர்கள் குணசேகரன், கோகுலநாதன், நிர்வாகிகள் சீனிவாசன், கண்ணன், பெரியசாமி, திருஞானமூர்த்தி, கிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai