சுடச்சுட

    

    ரசாயனம் கலந்த வெல்லம் உற்பத்தி  செய்தால் கடும் நடவடிக்கை:  உணவுப் பாதுகாப்புத் துறையினர் எச்சரிக்கை

    By  பரமத்தி வேலூர்,  |   Published on : 19th November 2014 01:22 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ரசாயனம் கலந்த வெல்லம் உற்பத்தி செய்யக்கூடாது எனவும், ரசாயனம் கலப்பது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, பரமத்தி வேலூர் வட்டம், வெல்லம் உற்பத்தி ஆலை உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டத்தில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் செவ்வாய்க்கிழமை எச்சரிக்கை விடுத்தனர்.
     பாண்டமங்கலம் அருகே, வெல்ல உற்பத்தியாளர்களுக்கான விழிப்புணர்வு ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட உணவுப் பாதுகாப்பு, மருந்து நிர்வாகத் துறை நியமன அலுவலர் தமிழ்செல்வன் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் வி. தட்சிணாமூர்த்தி உத்திரவின்படி, வெல்லம் தயார் செய்யும் போது, சர்க்கரை (அஸ்கா), ரசாயனப் பொருள்களைக் கலக்காமல் தரமான வெல்லத்தைத் தயாரிக்குமாறு விளக்கப்பட்டது.
     ஏற்கெனவே, இதேபோல, விழிப்புணர்வுக் கூட்டம் நடத்தப்பட்டு வெல்லம் உற்பத்தி செய்யும் ஆலைகளில், மாதிரி எடுத்து உணவு பகுப்பாய்வுக் கூடத்துக்கு அனுப்பப்பட்டது. அந்த ஆய்வு அறிக்கையில் 25 வெல்ல மாதிரிகள் தரமற்றது என அறிக்கை பெறப்பட்டு, வெல்ல உற்பத்தியாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. நோட்டீஸ் பெற்றவர்கள் உடனடியாக விளக்கம் அளிக்குமாறு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
     மேலும், இனி வரும் காலங்களில் வெல்ல உற்பத்தியில் சர்க்கரை (அஸ்கா), ரசாயனம் கலப்பது கண்டுபிடிக்கப்பட்டால் உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2011-ன் படி, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். இதில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் சிவசண்முகம், இளங்கோவன், சிவனேசன், வெல்ல உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai