சுடச்சுட

  

  அகில இந்திய கராத்தே போட்டிகள்: திருச்செங்கோடு மாணவர்கள் சிறப்பிடம்

  By திருச்செங்கோடு,  |   Published on : 20th November 2014 04:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அகில இந்திய கராத்தே போட்டியில் திருச்செங்கோடு எடர்னல் ஸ்போர்ட்ஸ் அகாதெமி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றனர்.

  சென்னை பிஎஸ்பிபி மில்லனியம் பள்ளி வளாகத்தில் பிரபல கராத்தே வீரர் ஆர்வி வசந்தகுமாரின் நினைவாக அகில இந்திய கராத்தே போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம், புதுவை ஆகிய மாநிலங்களைச் சேர்நத சுமார் 300 பேர் கலந்து கொண்டனர். உடல் எடை அடிப்படையில் சாய், கட்டா ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் கலந்து கொண்ட திருச்செங்கோடு எடர்னல் ஸ்போர்ட்ஸ் அகாதெமியைச் சேர்ந்த மாணவர்கள் ரஞ்சித்குமார், கிளேர், சஞ்சய், நவீன்குமார், குழந்தைவேல் ஆகியோர் சிறப்பிடம் பெற்றனர். அவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

  அகில இந்திய கராத்தே போட்டியில் சிறப்பிடம் பெற்ற எடர்னல் ஸ்போர்ட்ஸ் அகாதெமி மாணவர்களை திருச்செங்கோடு பிஆர்டி ஸ்போர்ட்ஸ் கிளப் இயக்குநர் டிடி பரந்தாமன் பரிசு வழங்கி வாழ்த்தினார். உடன், தலைமைப் பயிற்சியாளர் சிந்தியாபாபு, பயிற்சியாளர்கள் பாஸ்கர், குழந்தைவேல், செந்தில், தனபால் ஆகியோர் இருந்தனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai