சுடச்சுட

  

  உலகக் கழிப்பறை தினத்தை முன்னிட்டு, ராசிபுரம் நகராட்சி சார்பில், கழிப்பறையைச் சுத்தமாக வைத்திருப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் நகர வார்டு பகுதிகளில் புதன்கிழமை நடைபெற்றது.

  இந்த பிரசாரத்தில் நகராட்சி ஆணையர் பெ.வெ.சந்திரசேகரன் பங்கேற்று, பள்ளிக் கழிப்பறைகள், பொதுக் கழிப்பறைகள், கட்டணக் கழிப்பறைகள் போன்றவற்றை சுத்தமாக வைத்திருப்பதன் அவசியம், நோய் தடுப்பு முறைகள், நோய் கிருமிகள் பரவாமல் சுற்றுப் பகுதியைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டிய வழிமுறைகள் போன்றவை குறித்து பொதுமக்களுக்கு எடுத்துக் கூறினர். மேலும், கழிப்பறைகளைச் சுற்றியுள்ள செடிகளை அகற்றுதல், பிளாஸ்டிக் அகற்றம் போன்றவை குறித்தும் விளக்கிக் கூறப்பட்டது.

  பின்னர், இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களிடம் விநியோகம் செய்யப்பட்டன. கழிப்பறைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் பினாயில், கிருமிநாசினிகள் தெளிக்கும் பணிகளிலும் நகராட்சி சுகாதாரத் துறையினர் ஈடுபட்டனர். நகராட்சி துப்புரவு அலுவலர் ஆர்.செந்தில்குமார், சுகாதார ஆய்வாளர்கள் பிரகாஷ், எம்.அங்குராஜ், ஏ.லோகநாதன், ஆர்.பாஸ்கரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai