சுடச்சுட

    

    கால்நடை மருத்துவக் கல்லூரியில்அரசுப் பள்ளி மாணவர்கள் கள ஆய்வு

    By நாமக்கல்  |   Published on : 20th November 2014 04:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரசுப் பள்ளியில் பிளஸ் 2 அறிவியல் பிரிவில் படிக்கும் மாணவ, மாணவியர் விலங்கியல் செய்முறை பயிற்சிக்காக, நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை கள ஆய்வு மேற்கொண்டனர்.

    நாமக்கல் அருகே கந்தம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 அறிவியல் பிரிவு படிக்கும் மாணவ, மாணவியர் திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிக்காக, நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி, மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர்.

    விலங்கியல் ஆசிரியர் பிரபாகர், வேதியியல் ஆசிரியர் பாஸ்கரன் ஆகியோர் தலைமையில், 70 மாணவர்கள் பங்கேற்றனர். அவர்கள், நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் முறை, விபத்தில் காயம் அடைந்தவைகளுக்கு தையல் போடும் விதம், அறுவைச் சிகிச்சை செய்யும் வழிமுறை குறித்து நேரில் கண்டறிந்தனர்.

    மேலும், கால்நடைகளைத் தாக்கும் நோய்கள், அவற்றைத் தடுக்க வழிமுறைகள், எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும், மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. நேரடி கள ஆய்வு முடிவில் விலங்கியல் திட்ட அறிக்கையை மாணவர்கள் சமர்ப்பிக்கின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai