சுடச்சுட

    

    வேலகவுண்டம்பட்டி அருகே நடந்து சென்றவர் மீது மோட்டார்சைக்கிள் மோதியதில் உயிரிழந்தார்.

    வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள இழுபுலி கரட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மகன் தேவராஜன் (52). இவர் செவ்வாய்க்கிழமை வீட்டில் இருந்து நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார்சைக்கிள் தேவராஜன் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவர், நாமக்கல் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வந்தார்.

    இந்த நிலையில், புதன்கிழமை காலை அங்கு தேவராஜன் உயிரிழந்தார். விபத்து குறித்து வேலகவுண்டம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மோட்டார்சைக்கிளை ஓட்டி வந்த இழுப்புலி பகுதியைச் சேர்ந்த பழனிவேல் மகன் செந்தில்ராஜாவை (25) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai