சுடச்சுட

  

  வானிலை மாற்றம் காரணமாக, முட்டை ஓட்டின் தரம் குறைய வாய்ப்புள்ளது என கால்நடை மருத்துவக் கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.

  நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்ட

  செய்திக் குறிப்பு:

  புதன்கிழமை (நவ.19)முதல் அடுத்த 3 நாள்கள் வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும்.

  இதனால், அடுத்த 3 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இல்லை. காற்றின் வேகம் 3 முதல் 2 கி.மீ வரை இருக்கும். காற்று கிழக்கு திசையில் இருந்து வீசும்.

  வெப்ப நிலையைப் பொறுத்த வரையில் அதிகபட்சம் 89.6 டிகிரியாகவும், குறைந்தபட்சம் 69.8 டிகிரியாகவும் இருக்கும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சம் 85 சதவீதமாகவும், குறைந்தபட்சம் 70 சதவீதமாகவும் இருக்கும்.

  தமிழகத்தின் தென்கிழக்கு திசையில் காணப்படும் குறைந்த அழுத்த காற்று மண்டலத்தால் வடமேற்கு மாவட்டங்களில் மேகமூட்டம் காணப்பட்டு, பகல், இரவு வெப்ப அளவுகள் குறைந்தே காணப்படும். இதன் காரணமாக தீவன எடுப்பு கோழிகளிடையே உயர்ந்து காணப்படும்.

  வயதான கோழிகளில் முட்டையின் எடை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

  எனவே, அதிக எடையின் காரணமாக முட்டை ஓட்டின் தரம் குறைய வாய்ப்புள்ளது. புரதத்தை குறைப்பதுடன், முட்டை ஓட்டின் தரத்தை உயர்த்த வைட்டமின் டி3-யை தீவனத்தில் குறைந்த அளவிலாவது சேர்த்து வர வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai