Enable Javscript for better performance
ராசிபுரம் கல்லூரியில் ஆசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    ராசிபுரம் கல்லூரியில் ஆசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி

    By ராசிபுரம்,  |   Published on : 20th November 2014 04:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராசிபுரம் முத்தாயம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் ஆசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி நடைபெற்றது.

    அண்மையில் நடைபெற்ற இதற்கான தொடக்க விழாவில் கல்லூரிச் செயலாளர் ஆர்.முத்துவேல் ராமசாமி பங்கேற்று, பயிற்சியைத் தொடக்கி வைத்தார்.

    இந்தப் பயிற்சியில் ஹெலிக்ஸ் நிறுவனத்தின் தலைவர் செந்தில்குமார், பயிற்சியாளர்கள் பாலாஜி, ராஜா ஆகியோர் பயிற்சியளித்தனர். கற்றல் திறன் வளர்ப்பு முறைகள், ஆசிரியர்களுக்கான உளவியல் தொடர்பான அணுகுமுறைகள், மாணவர்களுக்குப் பயிற்றுவிப்பு முறைகள், தலைமைப் பண்பு, குழுத் திறன் ஆற்றல், தன்னம்பிக்கை வளர்ப்பு போன்றவை குறித்த பயிற்சிகள் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சியில், முதல்வர் ஆர்.செல்வகுமரன், மாணவர் நலன் டீன் ஆ.ஸ்டெல்லாபேபி, வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர் லுக்மன் சித்திக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai